சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் கூற்றை நம்பி, முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விசாரணை கோரி ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், பாஜக மாநிலச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் மனு அளித்திருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின்,
படக்குழுவினரை பாராட்டியதுடன்," அசுரம் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்" என தனது டுவிட்டர் பகத்தில் கூறியிருந்தார்
இதற்கு பதிலடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ்,"அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்" என குறிப்பிட்டு இருந்தார்.