சென்னை: ஒட்டுத் துணிக்கூட போடாமல், போல்டாக நடித்த அந்த நடிகைக்கு, அடுத்தடுத்து படங்கள் வரிசை கட்டி லைனில் நிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவர் நடித்த அந்த படமே வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றும், இவரை நம்பினால் இனிமேல் தமிழ் சினிமாவில் பிசினஸ் ஆகாது என்று தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகிறார்களாம். இதனால், அப்செட்டான அந்த நடிகை தனது பிறந்த நாளை கொண்டாட பெட்டி படுக்கையுடன் கிளம்பியுள்ளார்.
வட போச்சே
சினிமாவில் முன்னணி நடிகையாக மாற்றிய அந்த இயக்குநர் கணவரை விவாகரத்து செய்ததில் இருந்தே பிரபல நடிகர்கள் படங்களில் புக் ஆவதில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் அந்த நடிகை. அந்த விரக்தியில் தான் மான் இயக்குநர் கொண்டு வந்த அந்த சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
ஏமாற்று வேலை
ஒட்டுத் துணி இல்லாமல் சுமார் ஒரு மாத காலம் அந்த பில்டிங்கில் அம்மணி நடித்துள்ளார். அப்படி இப்படி என பல பில்டப்புகள் அந்த படத்திற்காக கொடுக்கப்பட்டது. ஆனால், படத்தின் டீசர் ரிலீசான போதே, அவர் பல காட்சிகளில் உடலை ஒட்டிய ஸ்க்ரீன் டிரெஸ் அணிந்து நடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.