டி.கே சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி.. திஹாரிலிருந்து விடுதலை


டெல்லி: பணமோசடி வழக்கில் கைதான காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.


ஹவாலா மோசடி, வரி ஏய்ப்பு, முறைகேடாக பணம் சேர்ந்தது உட்பட பல்வேறு வழக்குகளின் கீழ் தற்போது டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது. இதையடுத்து அவர் மீது பண மோசடி வழக்கு அமலாக்கத்துறை துறை மூலம் போடப்பட்டது.



கைது செய்யப்பட்டார்


இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்ட டி.கே சிவக்குமார் செப்டம்பர் 3ந்தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி சிறப்பு உயர் நீதிமன்றத்தில் டிகே சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டு, அதன்பின் அமலாக்கத்துறை மூலம் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். இவர் 13 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார்.



விசாரணை முடிவு 13 நாள் விசாரணை முடிந்த பின், நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 17ம் தேதி நீதிமன்ற காவலில் திகார் சிறையில் டி.கே சிவக்குமார் அடைக்கப்பட்டார். அதன்பின் டி.கே சிவக்குமார் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். ஆனால் அங்கு ஜாமீன் மறுக்கப்படவே டெல்லி ஹைகோர்ட்டில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.



Popular posts
ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்
Image
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: சுகாதார செயலர்
அதிபர் ட்ரம்ப் குடிமக்களுக்கு தெரிவித்துள்தாவது: "இந்த தொற்று வைரஸுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
ஆனால், பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.இதனால், மளிகை தொகுப்பை கையில் எடுத்து பார்க்கும் கார்டு தாரர்கள், வாங்காமல் திருப்பி தருகின்றனர். இரு வாரங்களாகியும், பல கடைகளில், தலா, 10 தொகுப்பு கூட விற்கவில்லை. இக்கட்டான சூழலில், துறையின் உயர் மட்டத்தினரும், அதிகாரிகளும், 'கமிஷனை' எதிர்பார்க்காமல், தரமான மளிகை பொருட்களை வாங்கி, கடைகளுக்கு அனுப்பி இருந்தால், ஏழை மக்கள் பயன் பெற்றிருப்பர்; அரசுக்கும் வருவாய் கிடைத்திருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பொருட்களை வாங்கிய மக்களோ, 'ரேஷனில் கொடுக்கப்படும் பொருட்களை வைத்து தான், சமையல் செய்கிறோம். ஆனால், எந்தப் பொருளுமே தரமானதாக இல்லை.'இப்படி எங்களை ஏமாற்றுவதை விட, ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்.
பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன