ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை வழக்கில், உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மற்றொரு முக்கியமான உறுதியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஃபாத்திமா தந்தையிடம் வழங்கியுள்ளார்.
ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாட்டில் அதிர்வலைகளை கிளப்பியது.
ஃபாத்திமா லத்திஃப் தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்திற்கு பிறகு, அவர் தற்கொலைக்கு காரணமாக ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் இருக்கும் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதைத்தொடர்ந்து ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப் தமிழ்நாட்டிற்கு வந்து தனது மகள் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.