மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது
கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக ஆதாரத்துடன் பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றம் சுமத்தப்பட்டு, அது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றத்திற்காக பேராசிர்யை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சில காலம் சிறவாசம் அனுபவித்த நிர்மலா தேவி ஜாமீனில் வெளியே வந்தார்.