தனது மகள் மறைவுக்கு நியாயம் கேட்டுப் போராடி வரும் லத்தீஃப் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டில்லியில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
அப்போது அவர் தனது மகள் மரணத்தில் 3 பேராசிரியர்கள், 7 மாணவர்கள் மீதுதான் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன்பின் லத்தீஃப் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, விசாரணை சரியான முறையில் நடக்கவேண்டும் என வலியுறுத்தினேன்.
எங்கள் கோரிக்கையைக் கேட்டுக் கொண்ட அமைச்சர், தேவைப்பட்டால் பெண் அதிகாரி தலைமையில்,
சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை மாற்ற உதவுவதாக உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை மாற்ற உதவுவதாக உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.