கடந்த 2019 ஆம் ஆண்டில் பட்ஜெட் விலையிலான ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியை வழங்கிய ரியல்மி நிறுவனம் இந்த 2020 ஆம் ஆண்டில் ரெட்மி ஸ்மார்ட்போன்களை "ஒரு வழி செய்துவிட வேண்டும்" என்கிற முனைப்பில் கீழ் உள்ளது போல் தெரிகிறது.
நம்பினால் நம்புங்கள் இந்த ரியல்மி சி2எஸ் ஸ்மார்ட்போனின் விலை (தாய்லாந்தில்) 1,290 பட் ஆகும். அதாவது இந்திய மதிப்பின் கீழ் வெறும் ரூ.3,069 ஆகும். இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்ஆனது டயமண்ட் பிளாக் என்கிற ஒற்றை வண்ண விருப்பத்தின் கீழ் மட்டுமே அறிமுகம் ஆகியுள்ளது.
அம்சங்களை பொறுத்தவரை, ரியல்ம் சி2எஸ் ஆனது 6.1 இன்ச் அளவிலான ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை 1560 x 720 பிக்சல்கள் என்கிற அளவிலான தீர்மானம், 19.5: 9 என்ற அளவிலான திரை விகிதம் மற்றும் 80.3% அளவிலான ஸ்க்ரீன் டூ பாடி விகித்துடன் கொண்டுள்ளது