கொரோனாவை ஒழிக்க ஜி20 நாடுகள் 5 டிரில்லியன் நிதி

இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் அதிகமான உயிழப்புகளை சந்தித்துள்ளன. அமெரிக்காவில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர், வேலையின்மை நலன்களுக்காக விண்ணப்பம் செய்துள்ளனர். நாட்டில் உணவு சேவை, கடைகள், போக்குவரத்து துறை உள்ளிட்ட 50 சதவீத அத்தியாவசிமற்ற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் மேயர் பில் தி பிளாசியோ கூறும்போது, "இது ஒரு தொடக்க நிலைதான், துரதிர்ஷ்டவசமாக நிலைமை இன்னும் மோசமான நிலையை எட்டலாம்." என கூறியுள்ளார். சென்ட் சபை, 2 டிரில்லியன் டாலர் நிதியை நேற்று(மார்ச்-26) ஒதுக்க முன்வந்துள்ளது. இது நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 3,400 டாலர் ரொக்கமாக வழங்கப்படும்.

இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கடந்த வாரத்தில் நோய் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இத்தொற்று நோய்க்கு விரைவாக மருந்து கண்டுபிடித்தாலும் கூட, உலகளவில் குறைந்தது 18 லட்சம் மக்கள், உயிரிழப்பு ஏற்படும் என பிரிட்டனின் இம்பீரியல் கல்லூரியின் ஆய்வு தெரிவித்துள்ளது.


Popular posts
ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்
Image
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: சுகாதார செயலர்
அதிபர் ட்ரம்ப் குடிமக்களுக்கு தெரிவித்துள்தாவது: "இந்த தொற்று வைரஸுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
ஆனால், பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.இதனால், மளிகை தொகுப்பை கையில் எடுத்து பார்க்கும் கார்டு தாரர்கள், வாங்காமல் திருப்பி தருகின்றனர். இரு வாரங்களாகியும், பல கடைகளில், தலா, 10 தொகுப்பு கூட விற்கவில்லை. இக்கட்டான சூழலில், துறையின் உயர் மட்டத்தினரும், அதிகாரிகளும், 'கமிஷனை' எதிர்பார்க்காமல், தரமான மளிகை பொருட்களை வாங்கி, கடைகளுக்கு அனுப்பி இருந்தால், ஏழை மக்கள் பயன் பெற்றிருப்பர்; அரசுக்கும் வருவாய் கிடைத்திருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பொருட்களை வாங்கிய மக்களோ, 'ரேஷனில் கொடுக்கப்படும் பொருட்களை வைத்து தான், சமையல் செய்கிறோம். ஆனால், எந்தப் பொருளுமே தரமானதாக இல்லை.'இப்படி எங்களை ஏமாற்றுவதை விட, ரேஷன் முறையையே நிறுத்தி விட்டால் கூட சரியாக இருக்கும்' என, வேதனையுடன் கூறுகின்றனர்.
பல பொருட்கள் தரமற்று உள்ளன; வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன